உனக்கு நன்மை செய்வேன்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவசுடர் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆதி 32:9 வசனத்தில் "உனக்கு நன்மை செய்வேன்" என கர்த்தர் யாக்கோபுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். நம்முடைய பிதாக்களுக்கு சொன்ன இந்த வாக்கை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றுவார். இப்படி நமக்கு வாக்குக் கொடுப்பதினால் பெருந்துன்பங்கள், கடுஞ் சோதனைகள், வியாகுலங் கள், உபாதைகள், தரித்திரம், மனவேதனை, கலக்கம் முதலியவைகளுக்கு நாம் நீங்கலாய் இருப்போம் என்பது மட்டுமல்ல. இவைகளெல்லாம் நமக்கு வந்தாலும், கர்த்தர் நமக்கு நன்மைதான் செய்கிறார். நம்முடைய துன்பங்கள் நமக்கு நன்மையாய் முடியுமென்றும், அவருடைய கிருபை நமக்குக் கிடைக்குமென்றும், பொல்லாங்கின்றும் விடுதலையாக்கப் பட்டு நமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளுவோமென்றும் நம்முடைய விருப்பங்கள் திருப்தியாகு மென்றும் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். வியாதியிலும், சுகத்திலும் தீவனோடிக்கும் போதும், மரிக்கும் போதும், இம்மையிலும், மறுமையிலும் கர்த்தர் நமக்கு நன்மை செய்வாரென்று அறிந்திருப்பது நமக்கு போதாதா? இது தேவன் நமக்கு கொடுத்த பாத்திரம். விசுவாசிக்கு ஆதரவு: கிறிஸ்தவனுடைய நம்பிக்கைக்கு ஆதாரம். மனத்திருப்திக்கும், நன்றியறிதலுக்கும் முகாந்திரம். நம் சத்துருக்களைக் கலங்கடிக்கிற ஆயுதம். யாக்கோபு சோதித்து காத்தரை உண்மையுள்ளவரென்று கண்டான். நாமும் அப்படியே காண்போம். “நான் உனக்கு நன்மை செய்வேன், என் தயவெல்லாம் உனக்கு முன்பாக போகச் செய்து, நித்திய இரட்சிப்பால் உன்னை ரசிப்பேன். நான் உன் தேவனும் மகிமையுமாயிருப்பேன்" என்று நம்முடைய தேவன் சொன்னதைக் குறித்து மகிழ்வோம். ஆமென்


உங்கள் அன்பு தம்பி மு.ராதல் செல்வகுமார்