உணவும் ஆரோக்கியமும்

சிறுதானிய கொள்ளு சோறு 


 தேவையான பொருட்கள்:


1) வரகு, சாமை, குதிரைவாலி (ஏதேனும் ஒரு வகை) - 100 கிராம்,
2) கொள்ளு - 50 கிராம்.
3) பூண்டு - 6 பல்,
4) உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க :
1) கடுகு - 5 கிராம்,
2) கறிவேப்பிலை - 5 கிராம்,
3) பெருங்காயம் - சிறிதளவு
வறுத்தப் பொடிக்க :
1) கடலைப் பருப்பு - 20 கிராம்,
2) மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 5 கிராம்,
3) கொத்தமல்லி - 30 கிராம்,
4) காய்ந்த மிளகாய் - 3
செய்முறை :
கொள்ளு மற்றும் அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, பூண்டை வதக்கி, வேக வைத்த அரிசி, கொள்ளு சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு : உடல் எடையைக் குறைத்து உடலுக்கு நன்கு வலுவை சேர்க்கும் இந்த சாதம்.