கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவசுடர் குடும்பத்தினர் அனைவருக்கும் நம்முடைய கஷ்ட நஷ்டங்களில் உதவி செய்கிற உபகாரியாகிய உலக ரட்சகர் நாமத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்! மனுஷனுடைய உதவி விருதா' சங்.60:11 இந்த சமுதாயத்தில் யார் சொந்த காலில் நிற்கலாம். ஆனால் யாரையும் சாராமல் தனித்து இருக்க முடியாது. உதவி என யாரிடமாவது வாழ்க்கையின் ஒரு கட்டத்திலாவது கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். பரம ஏழை உணவிற்காக பலரது உதவியை எதிர்ப்பார்த்து காத்திருப்பான். கொழுத்த பணக்காரன் தன் ஆரோக்கியத்திற்காக, உடல் நலத்திற்காக மருத்துவரின் உதவியை நாடியிருக்கிறான். உதவி சிரியதோ, பெரியதோ, அவசரக்காலத்தில் அதன் தேவை எல்லோருக்குமே பெரியதாயிரக்கும். நாம் எப்போதும் உரிமையோடு உதவி கேட்க ஒரு நபர் இருக்கின்றார். அவர் என்றுமே நமக்கு உதவி செய்ய மறுத்தது இல்லை. அலுத்துக் கொண்டதுமில்லை. நாம் உரிமையோடு அவரைக் கேட்க வேண்டும் என காத்திருக்கிறார். அவர் தான் நம் தேவன்.
வேதாகமத்தில் கேட்டுப் பெற்றுக்கொண்டோர் அநேகம் பேர். ஆனால் உதவி செய்த நபர்கள் என பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி சிறு விரிவாய் காண்போமா? இஸ்ரவேல் சிறுமி ! சீரியா நாட்டு படை தலைவன் நாகமான். சீரியர்கள் இஸ்ரவேல் நாட்டு சிறுமியை சிறைப்பிடித்து நாகமான் வீட்டில் கொண்டு வந்து நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக வைத்தார்கள். நாகமானுக்கு குஷ்ட ரோகம் என்ற மோசமான வியாதி இருந்தது. இதனால் உடலிலுள்ள சதைகள் அழுகிவிடும். இதைக்கண்ட சிறுமி நாகமானின் மனைவியிடம், "என் எஜமானர் இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசியிடம் போனால் நல்லது குஷ்டரோகத்தை அவர் சுகப்படுத்துவார் என்று சொல்கிறாள். இதை நாகமானின் மனைவி தன் கணவனி டம் சொல்கிறாள். அவரும் தான் சீக்கிரம் குணமாக வேண்டும் என துடிப்போடு இஸ்ரவேலுக்கு புறப்பட்டார். எலிசாவின் வாசற்படியிலே நின்ற நாகமானிடம் எலிசா ஆளை அனுப்பி, "நீ போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ண அப்பொழுது உன் மாமிசம் மாறி, நீ சுத்தமாவாய்" என்று - என்று சொல்ல சொன்னான். இதைக்கேட்டு நாகமானுக்கு பயங்கர கோபம் வந்தது. ஏனென்றால் எலிசா வந்து தேவனுடைய நாமததை தொழுது. தன் கையினால் அந்த இடத்தை தடவி குஷ்டரோகத்தை நீக்கிப் போடுவார் என நினைத்தப்போது இவர் ஏன் ஸ்நானம் பணண சொல்கிறார்? அதுவும் இஸ்ரவேலின் யோர்தானை விட தமஸ்குவின் ஆப்னாவும், பர்பாரும் நல்ல நதிகளன்றோ ? என உக்கிரமாய் திரும்பிப்போனான். ஆனால் அவனது ஊழியக்காரர் ஒருவர் அவனருகில் வந்து, தீர்க்கதரிசி கடினமான ஏதோவொன்றை செய்ய சொல்லியிருந்தால் நீர் அதை செய்திருப்பீர் அல்லவா? இப்போது அவர் உமமை ஸ்நானம் தானே பண்ண சொன்னார் என செய்து பார்க்க துாண்டுகிறான். நாகமானும் அவன் கூற யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது அவன் மாம்சம் ஒரு சிறுப்பிள்ளையின் மாம்சம் போலாகி சுத்தமானான் நாகமானுக்கு மிகுந்த சந்தோஷம். இஸ்ரவேலின் தேவன் தான் பூமி முழுவதிலும் ஒரே உண்மையான கடவுள் என உணர்ந்து எலிசாவை சந்தித்து காணிக்கை கொடுக்கிறான். ஆனால் எலிசா குணப்படுத்தியவர் கர்த்தரே என காணிக்கையை வாங்க மறுக்கிறார். (2இராஜா.5:15.16) ஆனால் எலிசாவின் ஊழியக்காரன் கேயாசி காணிக்கைக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லி நாகமானிடமிருந்து பொருட்களைப் பெற்றான். பொய் சொன்னதிற்கு தண்டனையாய் நாகமானின் குஷ்டம் உன்னையும் உன் சந்ததியையும் பிடிக்கும் என்ற என்ற சாபத்தை பெற்றான். குஷ்டம் பிடித்தது. சமுகத்தை விட்டே போனான்.
அருமையானவர்களே! அச்சிறுமியை போல கர்த்தரைப் பற்றி மற்றவர்களி டம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். எலிசாவை போல பிறருடைய நோய் தீர ஜெபியங்கள். கேயாசி போல் பொய பேசாதிருங்கள்.
எலியா ! கர்த்தர் எலியாவை சார்பாக் என்னு ம் ஊருக்கு போக சொல்கிறார். அங்கே அவரை பராமரிக்கும்படி ஒரு விதவைக்கும் கட்டளையிடுகிறார். அதன்படியே எலியா அவ்வுருக்கு போக, ஒரு விதவைப்பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் எலியா தண்ணீரும், அப்பமும் கேட்கிறார். ஆனால் அவளோ, பானையிலே ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெய்யுமே இருப்பதாக சொல்கிறாள். மேலும் வறுமையின் காரணமாக இருப்பதை சாப்பிட்டு நானும் என் குமாரனும் சாகவே இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள் வேதனையுடன். எலியா இருக்கும் மாவில் ஒரு சிறிய அடையை பண்ணிக்கொடு, பிறகு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். மேலும் கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் மாவும், எண்ணெய்யும் குறையாது என கூற அதன்படியே கர்த்தர் அவளது பானையின் மாவையும், கலசத்தின் எண்ணெய்யையும் குறையாது ஆசீர்வதித்தார். பின் ஒரு நாள் அவள் மகன் வியாதியில் விழுந்து மரித்து போக, அவளோ நொந்து, தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும். என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என கேட்க, எலியா அவனை தன் கட்டிலில் கிடத்தி மூன்று தரம் குப்புற விழுந்து தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி அவனை உயிரோடு எழுப்பினார். துாஷித்த வாயாலே அப்பெண், "கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும் கூறினாள். (1இராஜா.17) எலியா வால் அப்பெண்ணின் வறுமை ஒழிந்தது. பிள்ளை பிழைத்தான். எலியாவிற்கு தேவனால் அப்பெண்ணின் பராமரிப்பு கிடைத்தது. உதவிக்கு உதவி, தேவனின் சித்தம். மன்னா - கர்த்தர் உதவுகிறார் : இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறி ஒரு மாதம் ஆனது. மக்கள் வனாந்திரத்தில் இருக்கிறார்கள்.விளைவிக்கவும் வழியில்லை. இவ்வளவு காலம் வழிநடத்திய தேவன் இனி வழி நடத்துவார் என்ற விசுவாசமில்லாமல், மக்கள் நன்றியில்லாமல் இப்படி உண வில்லாமல் இங்கே இருப்பதை விட எகிப்திலே கர்த்தர் நம்மை கொன்றிருக்கலாம் என முறுமுறுத்தார்கள். அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்" யாத் 16:4. என்று கூறினார். சொன்னபடியே நடக்கிறது. மறுநாள் பனிப்போல கரையில் படர்ந்து கிடக்கின்றது. சிறிய உருண்டை யான அப்பம். சேவைக்க மட்டுமே எடுக்க இருப்பதை கொள்ள வேண்டும் என மோசே சொல்கிறார். ஆனால் ஜனங்கள் கீழ்ப்படியாமல் சேர்த்து வைத்த மன்னா மறுநாள் காலை புழுப்பிடித்து நாற்றமெடுக்கிறது. சூரிய ஒளிபட பட உருகிப்போகிறது. ஆனால் வாரத்தில் ஒருநாள் மட்டும் இரண்டு மடங்கு மன்னாவை எடுத்துக்கொள்ளும்படி கர்த்தர் சொன்னார். ஏழாம் நாள் மன்னா பொழியாது. ஆனால் ஏழாம் நாளுக்காய் சேர்த்து வைத்த மன்னா நாற்றம் அடிக்கவில்லை. புழுப் பூச்சி பிடிக்கவில்லை. வனாந்திரத்தில் இஸ்ரவேலர் இருந்த அத்தனை ஆண்டுகளும் கர்த்தர் மன்னா வை உணவாக அளித்தார்.
ஆம் பிரியமானவர்களே! உங்கள் தேவை கள் எதுவாய் இருந்தாலும் கர்த்தரிடத்தில் கேளுங்கள். ஆண்டவரை நோக்கி பாருங்கள். பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென்!