தாய்

அன்பான ஜீவசுடர் வாசகர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  உன் தகப்பன உன் தாயையும் கனம் பண்ணுவாயாக" உபா.5:16 தேவன் நமக்கருளிய பத்து கட்டளைகளுள் ஒன்று இவ் வசனம் என நம் எல்லோருக்கும் தெரியும். அதுவல்ல செய்தி. கொடுத்த கட்டளையை நிறை வேற்றுகிறோமா? இல்லையா? அது தானே முக்கியம். .. நாம் இந்த பூமியில் வந்து பிறந்தது தேவனுடைய சித்தமேயாகும். இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தாயின் தேவை உண்டு. பத்து மாதங்கள் -  வயிற்றில் சுமந்து, சோறூட்டி, சீராட்டி வளர்த்த தாய்க்கு வயது ஏற ஏற பரிவும், கவனிப்பும் அவ்வப்போது அம்மா சாப்பிட்டாச்சா? என " கனிவும் அவசியம் தானே? "உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைப் பண்ணாதே" நீதி 23:22


புகழ்ப்பெற்ற இலங்கை நாட்டு கதையொன்று தாயின் மேல் மகன் கொண்ட பாசத்தை பிரதிபலிக்கிறது. மேற்க்கொண்டு கதையை படிப்போமா?


நகரத்தில் நல்ல மனிதர் ஒருவர் இருந்தார். அவரிடம் போதுமான செல்வம் இருந்தது. திடீரென அந் நகரத்தில் ஏற்பட்ட கலகத்தில் அவரது செல்வம் சூறையாடப்பட்டது. வியாபாரம் படுத்தது. இக்கவலையிலேயே அவர் இறந்துவிட்டார். அவரது மனைவி, தன் ஒரே மகனை மிகவும் கடுமையாக உழைத்து படிக்க வைத்து, சமுதாயத்தில் அவன் தலை நிமிர்ந்து வாழ அவனை தயார் படுத்தினாள். அவன் மிகுந்த ஞான முள்ளவனாகவும், நேர்மையானவனாயும், சிறந்த பண்பாளனுமாய் இருந்தான்.


ஒருநாள் தாய் மகனை அழைத்து, "மகனே எனக்கு வயதாகி விட்டது. நான் நோயுற்று படுத்துக்கொண்டால் உனக்கு யார் உணவு கொடுப்பது, உதவிக்கு யாருமில்லாமல் துன்பப்படுவாய், எனவே  உனக்கு பொருத்தமான, குணமுள்ள பெண்ணை நீ திருமணம் செய்துக் கொள், அப்போது தான் எனக்கும் திருப்தி என கவலையுடன் கூறினாள். மகனும் அவவாறே செய்கிறேன் என ஒப்புக்கொண்டான். தேடிப்பிடித்து ஒரு பெண்ணை திருமணமும் செய்து வைத்தாள் தாய். ஆனால் என்னவோ மூதாட்டியான தனது மாமயாரை அவளால் அரவணைத்து போக முடியவில்லை . வீட்டை விட்டு கிழவியை விரட்டுவதே அவளது நோக்கமாக இருந்தது. இதனால் மகன் மிகவும் கலங்கிப்போனான். கன்னை வளர்க்க நிறை தன் தாய் பட்ட பாடுகள் அவன் கண் முன் நிழலாடியது. தாயின் நிலையை எண்ணி வருந்தியவனுக்கு ஒரு எண்ணம் உண்டானது. இரவில் தெரு . செருவாய் அலைந்து உடைந்த மண் பானை ஓடுகளை சேகரித்தான்.  - அவற்றை ஒரு தோல் பையில் போட்டு கட்டினான். அதை தாயிடம் கொடுத்து - "அம்மா, நீங்கள் ஒருபோதும் இதை திறக்க வேண்டாம் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு பெட்டியில் இந்த பையை வைத்து பூட்டி விடுங்கள். என் மனைவி பக்கமாக வந்தால், இந்த பையை சில முறை குலுக்கி விட்டு  நீங்கள் இந்த மீண்டும் பெட்டியில் வைத்துப் பூட்டி விடுங்கள், இதை மறக்காமல் செய்யுங்கள்" என்று தாயிடம் சொன்னான். தாயும் அவ்வாறே செய்தாள். சில நாட்களில் நிலைமை அப்படியே மாறியது. மருமகள் மாமியாரை நன்றாக கவனித்தாள். மகன் மகிழ்ச்சி அடைந்தான். சில மாதங்கள் சென்றது, தாயை தொழுநோய் தாக்கியது. மருந்து அமாத்திரை வாங்கிக் கொடுத்தும் நோயின் தீவிரம் குறையவில்லை . மகன் தாயின் அருகில் வந்தான். "அம்மா இந்த பையை மிக கவனமாய் உங்கள் படுக்கை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் பொருளும், பணமும் என் சிறு வயதில் நான் சேர்த்தவை, என்னை யார் கடைசி வரை கவனிக்கிறாரோ, அவருக்கே இந்த பை உரிய தாகும் என கூறுங்கள்" என்றான். தொழுநோயாளி என்று யாரும் ஒதுக்காமல், சிறந்த முறையில் அவன் மனைவி மட்டுமல்லாது, உறவினர்களும் கவனித்தனர். தாய் முழு திருபதியுடன் கண்ணை மூடினாள். உடல் அடக்கமும் செய்யப்பட்டது. மருமகள் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தனது மாமியாரின் பையை திறந்தாள். வெள்ளி காசு களை எதிர்ப்பார்த்து திறந்தவளுக்கு மண்பானை ஓடுகள் ஏமாற்றத்தைத் தந்தது. ஏமாற்றம் கோபமாய் மாறியது. கணவனை விட்டு பிரிந்தாள். ஆனால் மனைவியின் பிரிவ கணவனுக்கு பெரிதாய் பாதிக்க வில்லை வில்லை. தாயை கடைசிவரை மனம் கோணாமல் வெறுத்த மருமகளே அன்பாய் பார்த்துக் கொள்ள வைத்தோமே என திருப்தியுடன் இருந்தான். எவவளவு அருமையான மகன் பார்த்தாகளா? முதுமையில், நோயல் கஷ்டப்பட்டாள், ஆனால் அவளை எந்த நிலையிலும் மகன் கைவிடவேயில்லை. கடைசிவரை காத்தான. பெற்றோர் நம் பொறுப்பு. வயதாக ஆக குழந்தைகளாய் மாறும் அவர்களை நாம் அனுசரித்துச் செல்ல வேண்டும். நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.