பாட்டி வைத்தியம்

1. மூட்டு வலி தீர: * நன்னாரி வேரை தண்ணீரில் காய்ச்சி  தேன் கலந்து குடிக்கலாம்.


* சுண்ணாம்பை துளசி சாற்றில் குழைத்து மூட்டில் தடவினால் வலி குறையும்.


* வாத நாராணயக்கீரை அல்லது லச்சைக்கொட்ட கீரை | சிறிதளவு, பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.


* தினமும் ஊஞ்சல் ஆடுங்கள்.


2. வியர்வை நாற்றம் நீங்க:


* ஜாதி மல்லிப்பூ, ரோஜா, சாமந்தி மரிக்கொழுந்து, மகிழம்பூ இப்படி வாசனைத் தரும் பூக்களை நிழலில் உலர்த்திப் பொடி  செய்து பயத்தமாவுடன் கலந்து தேய்த்து குளித்து வரலாம்.


* அரைத்த கண்டங்கத்திரி இலையோடு நல்லெண்ணெய் கலந்து பூசி சீயக்காய் தூளினால் தேய்த்து குளிக்கலாம்.


3. துளசி, வில்வம், வேப்பிலை இம்மூன்றையும் அரைத்து 1 டீஸ்பூன் நீர் அல்லது மோர் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட எந்த நோயும் வராது.


4. சீரகத்தை வறுத்து பொடித்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட பசி உண்டாகும்.


5. 2 டீஸ்பூன் சித்தரத்தைப் பொடியுடன் கல்கண்டு பொடி சிறிது நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வறட்டு இருமல் தீரும்.


6. வாழைப்பூவை பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையும் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர குடற்புண் குணமாகும்.