மாங்குடி கிராமத்தின் பண்ணையாருக்கு தன்னிடம் இருக்கும் பெரும் செல்வத்தினால் பெருமை அதிகம். கார், பங்களா என இக்கிராமத்தில் தன்னை மிஞ்ச யாருமே இல்லை என்ற கர்வத்தில் இருந்தார். ஆனால் அவரது ஒரே மகன் பிரதாப்பிற்கு நன் அப்பாவின் குணம் பிடிக்காது. அவன் கற்ற கல்வி அவனுக்கு பணிவையும், தாழ்மையையும் கற்றுக் கொடுத்திருந்தது. ஒருநாள் அவர் முருங்கைக்காய் பறிப்பதற்காக கம்பை எடுத்து காய்களை அடித்துக் கொண்டிருந்தார். ஒன்றும் கீழே விழவில்லை. உடனே பிரதாப், தன் ஏழு வயது மகனை அழைத்தான். பின் இப்பா, கொஞ்சம் குனிங்க என பண்ணையாரும் குனிய அவள் தோளின் மேல் தன் ஏழு வயது மகன் அமர வைத்து கம்பைக் கொடுத்து அமக்க சொன்னான் காய்கள் படபடவென ஒமந்து பண்ணையாரின் கால்களுக்கு அருகில் விழுந்தன. "அப்பா நீங்க ஒருமுறை குனிஞ்சு பணிவா இருந்து பாருங்க, காய்கள் உங்க காலுக்கிட்ட வந்து விழுது, பணிவா இருக்கிறது அவமானம் இல்லப்பா, தாழ்மை, நல்லது. நாம தாழ்மையா இருந்தா கடவுள் நிச்சயம் நம்மை உயர்த்து வார்ப்பா எனக்கூற தன் மேட்டிமையான எண்ணத்தைக் குறித்து முதன் முறையாய் வெட்கினார் பண்ணையார்.
பனிவு